ஊஞ்சலில் விளையாடிய சிறுமி கழுத்தில் கயிறு சுற்றி பரிதாப மரணம்!!

சென்னையில் 14 வயது சிறுமி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டு இருந்தபோது கழுத்தில் கயிறு சுற்றி இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார்.


சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் லதா. இவரது மகள் அஷ்வினி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் கோயிலுக்கு லதா புதன்கிழமை சென்றுள்ளார்.


கோயிலுக்குச் சென்று மாலை வீட்டுக்கு வந்தபோது, அவரது மகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அண்டை வீட்டினரை கதறி அழுது அழைத்தார். விரைந்து வந்த அவர்கள் அஷ்வினியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தே அஷ்வினியை கொண்டு வந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை அதிகாரிகள் ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, அஷ்வினியின் உடலை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அஷ்வினியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஆவடி காவல் நிலையத்தில் இருந்து காவல் துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தற்கொலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.


இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''அஷ்வினி தனியார் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார். பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அவரது தந்தை பாஸ்கர் வேலைக்குச் சென்று இருந்தார். அம்மாவும் வீட்டில் இல்லை'' என்றனர்.