மைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மறுநாளே ஈரானும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது.

இதனையடுத்து அமெரிக்கப் படைகள் விரைவில் ஈராக்கிலிருந்து வெளியேறும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், ஈரான் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

24க்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.