வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க பிபிசிக்கு தெரிவித்தார்

முள் தேங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளும் பகுதிகளில் அதிகளவிலான நீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஈர வலய வனப் பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க பிபிசிக்கு தெரிவித்தார்.


முள் தேங்காய் மரம் அதிகளவிலான நீரை பெற்றுக் கொள்ளும் எனவும், அதனால் பிரதேசத்திற்கு பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், இலங்கையில் 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் முள் தேங்காய் செய்கை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் தென்னை தொழில்துறை பெருமளவு வீழ்;ச்சியை கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.


அத்துடன், ஈர வலய பகுதிகளில் செய்கை செய்யப்படும் இறப்பர் செய்கை அழிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதனால் இறப்பர் மற்றும் தென்னை ஆகிய இரண்டு தொழில்துறைகளும் இலங்கையில் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்ததாக ஜயந்த விஜேசிங்க கூறினார்.